Monday, April 21, 2014

தென்னாப்பிரிக்காவின் சிறப்பு தூதுவர் ஜூன் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

Monday, April 21, 2014
இலங்கை::இலங்கையில் நல்லிணக்கத்தைஏற்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவினால் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, சிறில் ரமஃபோசா, அடுத்த மாத இறுதியில் அல்லது ஜுன் மாத தொடக்கத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான, இணக்கப் பேச்சுக்களில் இந்தியா, நார்வேயை அடுத்து மூன்றாவது நாடாக தென்னாப்பிரிக்கா நடுநிலை வகிக்கும் முயற்சியில் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவினால் சிறிலங்காவுக்கான சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சிறில் ரமஃபோசா, அடுத்த மாத இறுதியில் அல்லது ஜுன் மாத தொடக்கத்தில் இலங்கை அதிபரைச் சந்திப்பதற்காக கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்காக, தென்னாப்பிரிக்க அதிபரால், கடந்த பிப்ரவரி மாதம் சிறில் ரமபோசா சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டார். தமிழ் சிறுபான்மையினருடன், நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் கொழும்பின் முயற்சிகளுக்கு ரமஃபோசா நடுநிலை வகிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

ரமஃபோசா சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்ட பின்னர், இலங்கை அரசதரப்புக் குழு தென்னாப்பிரிக்கா சென்று அவருடன் கலந்துரையாடிவிட்டுத் திரும்பியிருந்தது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவும் கடந்தவாரம் தென்னாப்பிரிக்கா சென்று அவருடன் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment