Pages

Wednesday, April 9, 2014

புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி: காவல்துறை!


Wednesday, April 09, 2014
இலங்கை::புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.தோல்வியடைந்துள்ள  புலிகளின் நோக்கங்களை நிறைவெற்றிக் கொள்வதில் கூட்டமைப்பு ஆர்வம் காட்

பயங்கரவாத அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தமிழீழ கனவை எட்டுவதே கூட்டமைப்பின் இலக்கு என காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சி சிவில் அமைப்புக்களை கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாக புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் சிவில் அமைப்புக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்பு காட்டி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முல்லைத்தீவு மீனவர் அமைப்பின் கட்டுப்பாட்டை கைவசப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கட்டுப்பாட்டையும் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
டி வருவதாகத் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment