Pages

Thursday, April 10, 2014

சீமான் கூட்டத்தில் கேள்வி கேட்ட தமிழ் ஆர்வலருக்கு அடி, உதை!

Thursday, April 10, 2014
திருநெல்வேலி::நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் சீமான் கூட்டத்தில் கேள்வி கேட்ட தமிழ் ஆர்வலருக்கு அடி, உதை விழுந்தது. நடிகர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர், அ.தி.மு.க., விற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். திருநெல்வேலியில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
 
அவருக்கு முன் ஒருவர் பேசிய போது, சுதந்திர போராட்டத்தில் கட்டபொம்மனோடு நின்று போரிட்டவர்கள் பட்டியலை சொன்னார். மேடை அருகே நின்ற ஒருவர், 'வீரன் சுந்தரலிங்கம் பெயரை கூறு' என சப்தம் போட்டார். ஆத்திரம் அடைந்த சீமான் கட்சியினர், 'காங்கிரஸ்காரன் குடித்துவிட்டு தகராறு செய்கிறான்' என கூச்சலிட்டனர்.
 
சிலர், அவரை கட்டைகளால் தாக்கினர். போலீசார் அவரை மீட்டு, சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவரது பெயர் எல்லாளன் என்ற குடும்பனார் எனவும்; தமிழர் நல அமைப்பு ஒன்றின் தலைவராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment