Saturday, April 12, 2014
லால்குடி::திருச்சி மாவட்டம், லால்குடியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சீமானு£ர் பிரபுவை ஆதரித்து பிரசாரம் நடந்தது. எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் தலைமை வகித் தார். திண்டுக்கல் லியோனி பேசியதாவது:
தமிழகத்தில் கல்வி துறையில் சமத்துவத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வியை கொண்டு வந்தவர் கருணாநிதிதான். இந்தியாவில் வீசுவது மோடி அலை அல்ல, மோசடி அலை தான் வீசுகிறது. பா.ஜ ஆட்சிக்கு வந்தால் மதவாத சக்திகள் தலையெடுத்து மதவெறியை தூண்டிவிடும். எனவே மதச் சார்பற்ற ஆட்சி அமைய திமுக வேட்பாளர் சீமானு£ர் பிரபுவுக்கு வாக்களியுங்கள்.இவ்வாறு லியோனி பேசினார்.

No comments:
Post a Comment