Pages

Sunday, April 27, 2014

இலங்கைக்கு கடத்த முயன்ற சிற்பி பறிமுதல்: பயணி கைது!

Sunday, April 27, 2014
சென்னை::சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் சிற்பி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சென்னை பயணி கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று முன்தினம் இரவு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.
அந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். உடமைகளை சோதனை செய்த போது ஜெய்னுனூல் (வயது 52) என்பவர் கொண்டு சென்ற பார்சலில் கடல் சிப்பி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
10 கிலோ எடையுள்ள கடல் சிப்பிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடல்வாழ் உயிரினங்கள் எடுத்து செல்வது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
கடல் சிப்பியை கடத்த முயன்ற சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஜெய்னுனூல் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட கடல் சிப்பியின் மதிப்பு ரூ. 2 லட்சமாகும். அவை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment