Wednesday, April 23, 2014

பாகிஸ்தான் இராணுவ தளபதிகள் குழுவினர் இன்று யாழ். விஜயம்!

Wednesday, April 23, 2014
இலங்கை::பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல இடங்களுக்கும் சென்றுள்ளனர். இலங்கை வந்துள்ள மேற்படி குழுவினர், இன்று 23ம் தேதி காலை யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் யாழ். பதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவைச் சந்தித்தனர்.

பாகிஸ்தானின் மேஜர் ஜெனரல் நோயல் இஸ்ரேல் கொக்கார்(Major General Noel Israel Khokhar) அவர்களின் தலைமையில் 21 பேர்அடங்கிய போதனாசிரியர்கள் மற்றும் மாணவ அதிகாரிகளைக் கொண்ட இந்த பிரதிநிதிகள் குழுவினரே வருகை தந்திருந்தனர்.
இந்த விஜயத்தின் போது யாழ். கட்டளைத் தளபதி அவர்களை சந்தித்த பின்னர், யாழ். நகரத்திற்கு விஜயம் மேற்கொண்டு நாகவிகாரை மற்றும் கோட்டை நூலகம் ஆகியவற்றிற்கும் சென்று பார்வையிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment