Saturday, April 26, 2014
மதுரை::மதுரை உள்பட தென் மாவட்டங்களில் உள்ள 6 நாடாளுமன்ற
தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை
மையங்களுக்கு கொண்டுவரபட்டன. அங்கு கேமிராவுடன் 3 அடுக்கு பாதுகாப்புப்
போடப்பட்டு துப்பாக்கி எந்திய நூற்றுக்கணக்கான போலீசார் 24 மணி நேரமும்
தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நேற்றைய முன் தினம்
வாக்குப் பதிவு நடந்தது. சராசரியாக 73 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல்
ஆணையம் அறிவித்துள்ளது. மதுரையில் உள்ள 6 தென் மாவட்ட தொகுதிகளில் பதிவான
வாக்குப் பதுவு இயந்திரங்கள் விடிய, விடிய வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு
கொண்டுவரப்பட்டன. தொகுதிவாரியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் விவரம்:
திண்டுகள் தொகுதியில் 1,616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்தல் முடிவடைந்த நிலையில் ஓட்டு எண்ணும் மையமான திண்டுக்கல் அண்ணா
பொறியியல் கல்லூரிக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி,
சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 சட்டமன்ற
தொகுதிகளில் 1,711 வாக்குச்சாவடிகள் உள்ளன. விருதுநகர் நாடாளுமன்ற
தொகுதிக்கு உட்பட்ட 1,526 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் 11 மணி வரை
விறு, விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. விருதுநகர் தொகுதியில் 75.48
சதவீத வாக்குகள் பதிவாகின. விருதுநகர் பாராளுமன்ர தொகுதிக்கான விருதுநகர்,
சிவகாசி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் விருதுநகர்
வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், அருப்புக்கோட்டை,
திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இயந்திரங்கள் விருதுநகர்
செந்திக்குமார் நாடார் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மின்னணு வாக்கு இயந்திரங்களும் அதிகாலை 5.30 மணி வரை கொண்டு
வரப்பட்டனர்.
சிவகங்கை தொகுதியில் 71 சதவீத வாக்குகள் பதிவாகின. இத்தொகுதிக்கான
வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி மற்றும்
பாலிடெக்னிக்கில் நடக்கிறது. காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை,
சிவகங்கை, திருமயம், ஆலங்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இருந்து மின்னணு
இயந்திரங்கள் லாரிகளில் கொண்டுவரப்பட்டனர். மத்தியம் வரை வாக்குப் பதிவு
இயந்திரங்கள் வந்து சேர்ந்தன. பின்னர் அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு 3
அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
மதுரை தொகுதியில் மோத்தம் உள்ள 14,39,792 வாக்குகளில் 9,77,577
வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு சதவீதம் 67.90. மதுரை, மத்தி, மேற்கு,
கிழக்கு, தெற்கு, வடக்கு, மேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு
இயந்திரங்கள் படிப்படியாக மதுரை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. மதுரை
நகரில் உள்ள 5 தொகுதிகளின் பெட்டிகள் நள்ளிரவு 12.30 மணிக்கு வந்துச்
சேர்ந்தன. மேலூர் தொகுதிக்குட்பட்ட கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள
வாக்குச்சாவடிகளிலிகுந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்து சேர தாமதமானது.
காலை 7.40 மணிக்கு தான் அனைத்து இயந்திரங்களும் வந்து சேர்ந்தன. பின்னர்
தேர்தல் பார்வையாளர்கள், கலெக்டர், வேட்பாளர்கள் ஏஜென்டுகள் முன்னிலையில்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர்
இந்த அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
தேனி நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த சோழவந்தான், உசிலம்பட்டி, போடி,
கம்பம், பெரியகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 74 சதவீத வாக்குகள்
பதிவானது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான தேனி
கம்மவார் சங்க கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் இந்த அறைக்கு சீல்
வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம்
நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி, திருச்சுழி, பரமக்குடி,
ராமநாதபுரம், திருவாடானை, முக்குளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் சராசரியாக
68.33 சதவீத வாகிகுகள் பதிவாகின. 1726 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த
பாதுகாப்புடன் புலங்குடியிலுள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு
கொண்டுவரபட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைக்கப்பட்டு, 3
அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வரும் மே16-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அதிவரை இங்கு
மூன்றடுக்குப் பாதுகாப்பு இருக்கும். 24 மணி நேரமும் செயல்படக்கூடிய
கண்காணிப்பு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை வளாகத்தை சுற்றி
பொறுத்தப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment