Pages

Thursday, April 17, 2014

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை!

Thursday, April 17, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை சனிக்கிழமை காலை பத்து மணிக்கு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தலைவரும், கட்சியின் திருகோணமலை மாவட்டப் பராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் தலைமையில் மூன்று கட்டங்களாக ஆறு மணித்தியாலங்கள் இக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதற்கமைய, நாளைய தினம் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தில், முதல் இரண்டு மணித்தியாலங்களில் ஜெனிவாத் தீர்மானமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடப்பாடுகள் தொடர்பிலும், கூட்டமைப்பின் தென்னாப்பிரிக்கா பயணம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து அடுத்து வரும் இரண்டு மணித்தியாலத்தில் கிழக்கு மாகாண சபையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது. இதன்பின்னரான மதிய உணவு இடைவேளைக்குப் பின்னரான இறுதி இரண்டு மணித்தியாலங்களில் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்னறங்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் விசேடமாக ஆராயப்படவுள்ளது.
 
அத்தோடு தற்போது அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கைதுகள் மற்றும் சுற்றி வளைப்புக்கள் மற்றும் மீண்டும் புலிகள் உருவாக்கம் என்ற போர்வையில் அரசின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
 
இக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment