Thursday, April 10, 2014
ராமேசுவரம்::ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை சுமார் 200-க்கும் மேற்பட்ட படகு
களில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதில் 20 படகுகள் நேற்று இரவு
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர்
குட்டி ரோந்து கப்பல்களில் அங்கு வந்துள்ளனர். அவர்கள் தமிழக மீனவர் களை
இங்கு மீன்பிடிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்ததோடு, அவர்களது
படகுகளுக்குள் சென்றும் சரமாரியாக தாக்கினர்.
மேலும் மீனவர்களின் படகுகளில் இருந்த டீசல், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி
சாதனங்களை எடுத்து கடலுக்குள் வீசி உள்ளனர். இதனை தடுக்க வந்த மீனவர்களை
தாக்கி விட்டு தங்களது குட்டி கப்பல்களுக்கு சென்று தங்களது ரோந்து
கப்பல்களை மீனவர்களின் படகுகள் மீது மோதினர்.
இதில் ன்மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்தன. 4 மீனவர்கள் காயம்
அடைந்தனர் இதுகுறித்து மீன்வளத் துறை உதவி இயக்குநர் மற்றும் போலீசில்
புகார் செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment