Pages

Tuesday, April 22, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் உக்கிர மோதல் ஏற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது!


Tuesday, April 22, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் உக்கிர மோதல் ஏற்பட்டுள்ளதாக ஊடகமான திவயின  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கு பற்றுவதா இல்லையா என்பது தொடாபில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டுமென தெரிவிப்பதாகவும்,  
 
ஸ்ரீதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன்,  செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கேற்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து தீர்மானிக்கும் நோக்கில் கடந்த 19ம் திகதி வவுனியாவில் கூட்டம் நடத்தப்படவிருந்தது.
 
எனினும், முரண்பாடுகள் காரணமாக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக திவயின தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment