Monday, April 21, 2014

சென்னை வந்தது சிஐஎஸ்எப் படை!

Monday, April 21, 2014
சென்னை::தமிழகம், புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா  மாநிலங்களில் இருந்து நேற்று ரயில் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு 5 படைப்பிரிவுகளும், எழும்பூருக்கு ஒரு படைப்பிரிவும் வந்து சேர்ந்தன.
 
மொத்தம் 574 பேரைக்  கொண்ட அந்த படைகளை 10, 20 பேர் கொண்ட குழுக்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 
 
தொடர்ந்து சட்டீஸ்கரில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த  படைப்பிரிவு  இன்று காலை பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்ட்ரல் வந்து  சேர்ந்தனர். பின்னர் மொத்தம் 83 வீரர்களை கொண்ட அந்தப் படைபிரிவினர் பஸ் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றனர்.

No comments:

Post a Comment