Thursday, April 24, 2014
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதை தடுக்கும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவின் கூட்டு நடவடிக்கையில் பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளதுடன் தற்போது சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதை கைவிட்டு மக்கள் அதிகமாக சட்டரீதியாக நிபுனத்துவ தேர்ச்சியின் பொருட்டு வேலைவாய்புக்காக செல்லும் வீதம் அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் சட்டரீதியாக அவுஸ்திரேலியாவிற்கு வேலை மற்றும் உறவினர்களை சந்திக்கும் நோக்குடன் வருகை தந்திருந்த 4987 இலங்கையர்களில் 3456 பேருக்கு பிராஜா உரிமை கிடைத்துள்ளதுடன் இலங்கையர்களுக்கான பிரஜா உரிமை 74 வீததிற்கு உயர்ந்துள்ளது என குடிவரவு அமைச்சர் திரு. ஸ்கொட் மொரிசன் தெரிவித்தார்
கடந்த வாரம் வெளியான ஐ. நா வின் அகதிகள் சம்பந்தமான உயர் ஸ்தானிகரின் புள்ளி விபரத்தில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து சென்ற மாதம் வரையிலான காலப்பகுதியில் புகலிடம் கோருவோரை பதிவு செய்தல் முற்றாக குறைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசு சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்வதை கண்டிப்பதுடன் அதனை முற்றாக நிறுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.
மேலும் சட்ட விரோதமகாக அவுஸ்திரேலியா செல்வதை தடுக்க இலங்கை கடற் படை, இலங்கை பொலிஸ் மற்றும் ஏனைய சட்ட நிருவனங்களின் முயற்சியை நாங்கள் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் எமது இரு நாடுகளுக்கிடையிலான சட்ட விரோத குடியேற்றம் தொடர்பில் பாரிய அனுபவம் உள்ளது எனவும். தற்பொழுது பெருந்தொகையான இலங்கையர்கள் சட்டரீதியாக அவுஸ்திரேலிய பிரஜா உரிமை பெற்று வருவதாகவும் கூறினார்.

No comments:
Post a Comment