Tuesday, April 22, 2014
டமாஸ்கஸ்: சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட, பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர்கள், விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிரியாவில்,
கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், பிரான்ஸ் பத்திரிகையாளர்கள் நான்கு பேர்,
தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டனர். தங்களுடைய சிறை அனுபவம் குறித்து,
திதீர் பிரான்ஸ்வா கூறுகையில், ''நான்கு பேரையும், ஒரு கட்டடத்தின்
அடித்தளத்தில், சூரிய ஒளி புகாத அறையில், அடைத்து வைத்திருந்தனர். எங்களை
மிகவும் மோசமாக நடத்தினர். ஆறு மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் சூரிய
ஒளியைப் பார்க்கிறோம்,'' என, கூறியுள்ளார்.
கடந்த வாரம், நான்கு பேரும்,
கைகள் மற்றும் கண்களை கட்டிய நிலையில், சிரிய நாட்டு எல்லைப் பகுதியில்,
துருக்கி ராணுவத்தினரால் மீட்கப்பட்டனர். அங்கிருந்து, பிரான்சுக்கு
விமானம் மூலம், பத்திரிகையாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். பிரான்ஸ் நாட்டு
விமான நிலையத்தில் வந்திறங்கிய நான்கு பேரையும், அந்நாட்டு அதிபர்,
ஹோலன்ட் மற்றும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினர் வரவேற்றனர்.

No comments:
Post a Comment