Pages

Friday, April 25, 2014

கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு- சந்திரகுமார் எம்.பி.யின் வேண்டுகோளுக்கிணங்க ஐந்து மில்லியன் ஒதுக்கீடு!

Friday, April 25, 2014
இலங்கை::கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக மக்கள் குடிநீரை பெறுவதில் பெரும் சிரமங்களை சந்த்தித்து வருகின்றனர். எனவே, விரைவாக குடிநீர் விநியோகத்திற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என
 
பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள், கடந்த இரண்டு வாரத்திற்கு முன் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஆலோசனை குழுக்கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
 
இந்நிலையில், கிளிநொச்சியில் கடுமையான குடிநீர் தட்டுபாடு நிலவுகின்ற பிரதேசங்களுக்கு குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளும் வகையில் நீர்தாங்கி வாகனங்கள், நீர்தாங்கி கொள்கலன்கள் போன்றவற்றை பெற்று மக்களுக்கு குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கு
 
களிநொச்சி மாவட்ட அரச செயலகத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஐந்து மில்லியன் ரூபாக்களை உடனடியாக ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் வரும் நாட்களில் கிளிநொச்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்ற கிராமங்களுக்கு சீரான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment