Pages

Monday, April 14, 2014

யாழ். மாநகரசபையில் வீதி விளக்குகளின் ஒரு தொகுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

Monday, April 14, 2014
இலங்கை::யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மாநகரசபையால் நிர்மாணிக்கபட்ட வீதி விளக்குகளின் ஒரு தொகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். யாழ். மாநகரசபையால் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீதி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் (13) அவற்றில் ஒரு தொகுதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதான மின் விளக்கினை அமைச்சர் அவர்கள் ஒளிரச் செய்தார். யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 365 வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக நகரின் முக்கிய பகுதியை இலக்காகக் கொண்டு 45 வீதி விளக்குகள் இன்று முதல் ஒளி பெற்றுள்ளன. இதேபோன்று ஏனைய வீதி விளக்குகளும் விரைவில் ஒளிபெறவுள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைவாகவே இவ்வீதி விளக்குகள் யாழ். மாநகரசபையால் நிர்மாணிக்கபட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்டர் அலன்டின் (உதயன்), யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, இலங்கை மின்சார சபையின் பிராந்திய மின் பொறியியலாளர் ஞானகணேசன், நகர மின் பொறியியலாளர் அருள்நாதன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் மரியதாசன், ஈ.பி.டி.பியின் யாழ். நகர இணைப்பாளர் இளங்கோ (றீகன்) உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment