Wednesday, April 23, 2014
இலங்கை::கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிசாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள அலுவலகம், பொது பல சேனா அமைப்பினரால் இன்று புதன்கிழமை நண்பகல் முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்டது.
ஜன பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரர், குறித்த அலுவலகத்தில் மறைந்திருப்பதாகக் கூறியே பொது பல சேனா அமைப்பினர், குறித்த அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலுவலகத்தை சுற்றிவளைத்து உள்ளே நுளைந்த பொதுபல சேனாவின் உறுப்பினர்கள் அமைச்சரின் அலுவலகத்தின் ஒவவொரு பகுதியையும் தேடுதல் நடத்தினார்கள்.
No comments:
Post a Comment