Saturday, April 12, 2014
இலங்கை::இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கான தனது விசேட பிரதிநிதியாகத் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவினால் நியமிக்கப்பட்ட சிறில் ரம்போசாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு இன்று ஜோகன்ஸ்பேர்க்கில் சந்தித்துப் பேசியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் எம்.பியின் தலைமையில் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி., செல்வம் அடைக்கநாதன் எம்.பி. ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழுவே இந்தப் பேச்சுக்களில் ஈடுபட்டது.
தங்களுடைய இன்றைய பேச்சுகள் பயனுள்ளவையாக அமைந்தன என்றும் - தொடர்ந்து விசேட பிரதிநிதியுடன் தொடர்பாடலில் ஈடுபடுவதை - குறிப்பாக இலங்கைக்கு விரைவில் மேற்கொள்வதற்கு அவர் எண்ணியிருக்கும் விஜயத்தின் போது அவருடன் பேச்சுக்களில் ஈடுபடுவதை - தாங்கள் பார்த்திருக்கின்றார்கள் என்றும் - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் இன்றைய பேச்சுக்களுக்குப் பின்னர் தகவல் வெளியிட்டனர். இக்குழுவினர் தென்னாபிரிக்காவில் சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் மெயிட்டி நெக்கோனா அம்மையாருடனும் விரிவான பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment