Pages

Saturday, April 19, 2014

தமிழீழம் மலரும்'துண்டுப்பிரசுரம்: மற்றும் ஒரு புலிகளின் ஆதரவாளர் கைது!

Saturday, April 19, 2014
இலங்கை::தமிழீழம் மலரும் என்ற துண்டுப்பிரசுரத்தினை ஒட்டிய குற்றச்சாட்டில் மேலுமொருவர் கைதாகியுளளார்.; யாழ்.

இணுவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மன்மதராசா வேணுகாந்தன் என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரத்தினை ஓட்டினார் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயதாஸன் கஜானன் என்ற இளைஞனே நேற்று கற்றத்தடுப்பு பிரிவினரால்  கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்தே இரண்டாவது இளைஞனும் கைதாகியுள்ளார்.

No comments:

Post a Comment