Pages

Wednesday, April 16, 2014

காணமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளில் ஆதாரமில்லை: ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச!

Wednesday, April 16, 2014
இலங்கை::காணமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளில் ஆதாரமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் காணாமால் போனதாக ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைபாடு செய்யப்பட்ட போதிலும், அது குறித்த ஆதாரங்கள் கிடையாது என ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார்.

எங்க எப்போது காணாமல் போனார்கள் என்பது பற்றிய தகவல்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது ஓர் பாரிய பிரச்சினை எனவும், குறித்த முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை எனவும் எனவே அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் விசாரணைகள் நடத்தப்பட்ட போது, காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முறைப்பாடு செய்த குடும்ப உறுப்பினர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில குடும்பங்களில் 9-10 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment