Friday, April 25, 2014

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்கு எந்தவித பலனும் இல்லை –பிரதியமைச்சர் முரளிதரன்!

Friday, April 25, 2014
இலங்கை::தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை உசுப்பேற்றிவிட்டு உணர்வாக கதைப்பவர்கள் மட்டுமே.அவர்களினால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லையென மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இலுப்படிச்சேனையில் இடம்பெற்றது.

வவுணதீவு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் நிர்மலராஜ் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வவுணதீவு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது வவுணதீவு பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் மற்றும் திவிநெகும வேலைத்திட்டங்கள் உட்பட குறி;;த்த பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

தற்போது கடும் உஸ்ணமான கால நிலை நிலவுவதால் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினைப்பெற்றுத்தருவதாக பிரதியமைச்சர் உறுதியளித்தார்.

அத்துடன் நீண்டகால திட்டமாக வவுணதீவு பிரதேசத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மூலம் குடி நீர் விநியோக திட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் உறுதியளித்தார்.

இதேபோன்று எல்லைப்பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசங்களை தடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் அவற்றினை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியுதவிகளை பெற்றுத்தருவதாகவும் பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.

அத்துடன் வீதிகள்,மின்சாரம் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

No comments:

Post a Comment