Thursday, April 10, 2014
சென்னை::இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை நடாத்துவதற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என இந்திய வெளிவிவகார செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அண்மையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரத்தை மீறிய செயலாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவளிக்காதன் மூலம், இலங்கையுடன் நெருங்கிச் செயற்படக் கூடிய சாத்தியம் கிட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழர் விவகாரத்தில் இந்தியா என்ன விடயத்தை எதிர்பார்க்கின்றது என்பதனை இலங்கை அரசாங்கம் சரியாக புரிந்து கொண்டுள்ளதகாக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இந்தியா அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையுடன் இந்தியா மிக நெருங்கிய தொடர்புகளை பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment