Thursday, April 10, 2014

வாழைச்சேனை காகிதாலையில் ஏற்பட்ட கைகலப்பில் இருவர் படுகாயம்!

Thursday, April 10, 2014
இலங்கை::வாழைச்சேனை கடதாசி ஆலையில் சம்பளம் வழங்கப்படாத நிலையில் தொழில் சங்கம் ஒன்றுக்கு மாத்திரம் இன்று சம்பளம் வழங்கவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது தொழில் சங்கங்களின் உறுப்பினர்களுக்கிடையில் எற்பட்ட கைகலப்பில் இரண்டு ஊழியர்கள் நேற்று பிற்பகல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலையில் 154 ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றனர் இவர்களுக்கான கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் முதல் கடமை செய்யாமல் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.

இவ் ஆலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிலாளர் சங்கம், ஐக்கிய தேசியக் கட்சி தொழிலாளர் சங்கம், சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கம் ஆகிய மூன்று தொழிலாளர் சங்கங்கள் இயங்கி வருகின்றது.

இந்த நிலையில் அரசாங்கத்தால் ஊழியர்களது சம்பள நிலுவையை வழங்குவதற்காக மூன்று கோடி ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் இரண்டு மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்று நிருவாகத்தால் தெரிவிக்கப்பட்டதையடுத்து தந்தால் எல்லோருக்கும் முழுச் சம்பளத்தையும் வழங்குமாறு இரண்டு தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் பதினெரு பேருக்கு மாத்திரம் சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மற்றய இரு சங்கங்களின் உறுப்பினர்களும் எடுத்தால் எல்லோரும் எடுக்க வேண்டும் இல்லா விட்டால் ஒருவரும் எடுக்கக்கூடாது என்று கூறியதில் ஏற்பட்ட கைகலப்பில்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் தாக்கியதில் இரண்டு பேர் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment