Friday, April 18, 2014

பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 96 பேரை கைது செய்வதற்காக சர்வதேச காவற்துறையினரிடமிருந்து சிவப்பு ஆணை: அஜித் ரோஹன!

Friday, April 18, 2014
இலங்கை::பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 96 பேரை கைது செய்வதற்காக சர்வதேச காவற்துறையினரிடமிருந்து சிவப்பு ஆணை பெற்றுக் கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர், சிரேஷ்ட காவற்துறை அதிகாரி அஜித் ரோஹன     இதனை குறிப்பிட்டார்.

இதில், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 40 புலி சந்தேகத்துக்குரியவர்களும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய சந்தேகத்துக்குரியவர்கள், பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என காவற்துறை ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 5 ஆம் திகதி முதல் இதுவரை பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment