Pages

Monday, April 21, 2014

பண்டிகை காலப் அனர்த்தங்களில் 90 கும் அதிகமானவர்கள் பலி!


Monday, April 21, 2014
இலங்கை::பண்டிகை காலப்பகுதியில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் 94 பேர் உயிரிழந்திருப்பதாக காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 150 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் அனர்த்தங்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தல் போன்ற விடயங்களே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதவிர, சுமார் 243 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுமார் ஆயிரத்து 631 வாகன செலுத்துனர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்திய நிலையில் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை கதிர்காமம் தடகமுவ வாவியில் வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் நீரில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment