Monday, April 21, 2014
மெக்சிகோ சிட்டி:வடக்கு மெக்சிகோ நகரில் இருந்து சால்டிலோ நகருக்கு நேற்று மாலை 8 பயணிகளுடன் ஹாவ்கர் 800 என்ற தனியார் விமானம் சென்றது. இன்று அதிகாலை சால்டிலோ நகரில் தரையிறங்கிய போது கடும் பனிமூட்டமாக காணப்பட்டதால், விமான நிலையத்தின் அருகில் இருந்த குடோன் மீது விமானம் மோதி தரையில் வெடித்து சிதறியது.
இந்த விமானத்தில் பயணம் செய்த 2 திருமண ஜோடிகள், 10 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண், 2 விமானிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தீயில் கருகி பலியானார்கள். அவர்களின் உடல் களையும் கறுப்பு பெட்டியையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று மெக்சிகோ விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி பிரான்சிஸ்கோ கான்ட்ரிரால் கூறினார்.

No comments:
Post a Comment