Sunday, April 06, 2014
சென்னை::நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 24.4.2014 அன்று
நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான
ஜெயலலிதா நேற்று (5.4.2014 _ சனிக் கிழமை), தஞ்சாவூர் நாடாளுமன்றத்
தொகுதியில் `புதிய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் நகராட்சி மைதானம்'
என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு
எழுச்சிப் பேருரையாற்றி வாக்கு சேகரித்தார்.
அப்போது, பொதுக்கூட்ட மேடையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்,
முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த,
திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். புவனேஸ்வரி, திருவாரூர் மாவட்ட
மருத்துவ அணித் தலைவர் டாக்டர் வி. அசோக்குமார், பண்ணைவயல் தெ.
தியாகராஜன், தஞ்சாவூர் ஒன்றியம், மாத்தூர் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவர்
அ. பிரவீன்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பள்ளத்தூர் ஊராட்சி மன்றத்
தலைவர் தங்கம் பாலசுப்பிரமணியன், முதுகாடு ஊராட்சி மன்றத் தலைவர் என்.
பழனிவேல், பட்டுக்கோட்டை ஒன்றியம், மல்லிப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர்
ஏ.டி. மருதமுத்து, கொள்ளுக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் எம். குழந்தைவேலு;
திமுக_வைச் சேர்ந்த டாக்டர் பி. பாரதிமோகன், ஒரத்தநாடு ஒன்றியம்,
பஞ்சநதிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் கே. சுப்பிரமணியன், தலைமைக் கழகப்
பேச்சாளர் பேராசிரியர் ந. ராமமூர்த்தி; மதிமுக_வைச் சேந்த தஞ்சாவூர் மாவட்ட
மாணவர் அணி அமைப்பாளர் ஆர். கண்ணையன், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் சாமி.
செல்லத்துரை;
தேமுதிக_வைச் சேர்ந்த, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்
எம். சித்திக், மரக்காவலசை ஊராட்சி மன்றத் தலைவர் எம். தேவேந்திரன், அமர சிம்மேந்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் பெ. கல்யாணசுந்தரம்;
உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு பணியாற்றி வரும்
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தவமணி செல்வராஜ்ஞு,
ஆண்டிக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மு. சந்திரகலா உள்ளிட்ட 3,500 பேர்
தத்தமது கட்சிகளில் இருந்து விலகி தங்களைக் கழகத்தின் அடிப்படை
உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு திருச்சி சென்றடைந்த
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, திருச்சிராப்பள்ளி
நாடாளுமன்றத் தொகுதியில் `ஜி. கார்னர், பொன்மலை' என்ற இடத்தில் நடைபெற்ற
மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சிப்
பேருரையாற்றி வாக்கு சேகரித்தார்.
அப்போது, பொதுக்கூட்ட மேடையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்,
முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த,
புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் எஸ். சிவக்குமார்,
புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரும், புதுக்கோட்டை நகர மன்ற 10_ஆவது வார்டு
உறுப்பினருமான மோகன், புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர்
என்.சி. ராதாகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஐ.
ராயர், கறம்பக்குடி வட்டார இளைஞர் காங்கிரஸ் செயலாளர் வி.டி. இளஞ்செழியன்;
தேமுதிக_வைச் சேர்ந்த, திருச்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.
உமா மகேஸ்வரி, கறம்பக்குடி ஒன்றிய விஜயகாந்த் மன்றச் செயலாளர் கே. கணேசன்,
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு 7_ஆவது வார்டு உறுப்பினர் மஞ்சுளா,
மணிகண்டம் ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலாளர் கே. முருகானந்தம்; பாட்டாளி
மக்கள் கட்சியைச் சேர்ந்த, திருச்சி மாவட்ட அமைப்புச் செயலாளர் கா. சையது
முஸ்தபா;
திமுக_வைச் சேந்த திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு முன்னாள்
செயலாளர் எட்வின் ஜெயக்குமார்; புதிய நீதிக் கட்சியின் புதுக்கோட்டை
மண்டலப் பொறுப்பாளர் கோ. சீனிவாசன்; இந்திய கம்க்ஷ்னிஸ்ட் கட்சியின்
புதுக்கோட்டை நகர 1_ஆவது வார்டு செயலாளர் எஸ். செல்வபாண்டியன் உள்ளிட்ட
1,820 பேர் தத்தமது கட்சிகளில் இருந்து விலகி தங்களைக் கழகத்தின் அடிப்படை
உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
தாயுள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, அ.தி.மு.க.
பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த
நன்றியினை, கழகத்தில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
.jpg)
No comments:
Post a Comment