Friday, April 25, 2014
புதுடெல்லி::ராஜிவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யக் கோரும் வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதனால், நளினி, முருகன் உள்பட 7 பேரும் விடுதலையாவதில் மீண்டும் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, கடந்த 1991 மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது புலிகளின் மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த படுகொலை தொடர்பாக, அப்போது அமலில் இருந்த தடா சட்டத்தின்(பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்) கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்து புலனாய்வு மேற்கொண்டது. வழக்கில் விடுதலை புலிகள் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். வழக்கை தடா சட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்பட 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது.
பின்னர், அப்பீலில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு மட்டும் தூக்கு உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டது. பின்னர், நளினியின் தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். ஆனால், அந்த கருணை மனு மீது பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை காரணம் காட்டி, அவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த வழக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதை தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சி.கே.சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, கடந்த பிப்ரவரி 18ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
‘முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு மீது நடவடிக்கை எடுக்க 11 ஆண்டுகளுக்குமேல் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிடுகிறோம். மூன்று பேரும் 22 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதால்அவர்களின் ஆயுள் தண்டனையை முடிந்ததாக கருதலாம். இது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம்’ என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர். இதை தொடர்ந்து இவர்கள் 3 பேருடன் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 4 பேரையும் சேர்த்து சிறையில் இருந்து விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ‘குற்றவியல் நடைமுறை சட்டப்படி சிபிஐ புலன் விசாரணை செய்த வழக்குகளில், தண்டனை பெற்றவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டும்.
இந்த விதியின் அடிப்படையில் 7 பேரையும் சிறையில் இருந்து விடுவிக்க அனுமதி கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 3 நாட்களுக்குள் பதில் கிடைக்காவிட்டால் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்வோம்’ என அவர் அறிவித்தார். தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. அதில், அரசியல் காரணங்களுக்காகவே ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அனைவரையும் ஒரே சமயத்தில் விடுதலை செய்ய தமிழக அரசு முன்வந்துள்ளது. இது சட்டபடியான முடிவு அல்ல என்று கூறியிருந்தது. தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இதை விசாரித்து, ராஜிவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு கடந்த பிப்ரவரி 20ம் தேதி இடைக்கால தடை விதித்தது.இந்நிலையில், முருகன் உள்பட 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து ஏப்ரல் 1ம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கிடையே, நளினி, முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர். இவ்வழக்கில் தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சி.கே.சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று காலை தீர்ப்பளித்தது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டுமென பரிந்துரை செய்து நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.ராஜிவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு கடந்த பிப்ரவரி 20ம் தேதி இடைக்கால தடை விதித்தது. இந்த தடை நீடிக்கிறது. இதனால், நளினி, முருகன் உள்பட 7 பேரும் விடுதலையாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், ராஜிவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தனுக்கு தூக்குதண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment