Pages

Thursday, April 24, 2014

இன்று 40 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு: 1.34 லட்சம் போலீசார் குவிப்பு!

Thursday, April 24, 2014
சென்னை::தமிழகம் மற்றும் புதுவையில் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று (24-ந் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டது. குறிப்பாக எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டில் பாராளுமன்றத்துக்கு 9 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுவரை 5 கட்டங்களில் 231 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று 6_வது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி களிலும் புதுவையில் உள்ள ஒரு தொகுதியிலும் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. 
திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு 5தொகுதிகள் போக மீதமுள்ள 35 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பா.ஜ. க தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் தேமுதிக 14 தொகுதிகளிலும், பாமக 8 தொகுதிகளிலும், பா.ஜ. க  மற்றும் மதிமுக தலா 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் பா.ஜ. க   சின்னத்தில் போ ட்டியிடுகின்றனர். (நீலகிரி தொகுதி பிஜேபி வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அங்கு இக்கட்சியின் சார்பில் யாரும் போட்டியிடவில்லை)
இது தவிர காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சியினர் 18 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். 
 தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம்  எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும்  வாக்குப்பதிவு எந்திரம் உள்பட அனைத்து பொருட்களும் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் மின்னணு இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்..அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் <ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக தமிழகத்தில் அனுப் ஜெய்ஸ்வால் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டார். அதே போல சென்னை மாநகர கமிஷனராக திரிபாதியும் பணி அமர்த்ததப்பட்டார்.
இவர்கள் இருவரும் தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு பணிகள் குறித்து பலமுறை ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி முடித்துள்ளனர். 
மாநில அளவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் டி.ஜி.பி. அனுப் ஜெய்ஸ்வால் மற்றும் தேர்தல் பிரிவு ஐ.ஜி. சேச சாயி ஆகியோரது மேற்பார்வையில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், தேர்தல் பாதுகாப்பிற்கு, ஒரு லட்சத்து, 43 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்,"" என, டி.ஜி.பி., அனுப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.  நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:_: பாராளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மொத்தம், 28,224 கட்டடங்களில், 60,818 ஓட்டுசாவடிகள் உள்ளன.தேர்தல் பாதுகாப்பு பணியில், 1.43 லட்சம் போலீசார் <ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அனைவரும் தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து இறுதிக் கட்ட ஆலோசனையில் <ஈடுபட்டுள்ளனர்.
பதட்டம் நிறைந்த தொகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஓட்டுப்பதிவுகளை கண்காணிக்கும் வகையில் தேர்தல் பார்வையாளர்கள் அந்தந்த தொகுதிகளை வாகனங்களில் வலம் வருவர். மற்றும் ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ன. 
காலை 7 மணி முதல் 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள் மூட சம்பந்தப்பட்ட சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment