Friday, April 11, 2014
பண்டிகைக் காலத்தில் தத்தமது வீடுகளுக்கு செல்வதற்காக நகரங்களுக்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பு கருதி 35,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை::எதிர்வரும் பண்டிகை காலத்தில் அனுமதியற்ற வகையில் மதுபான விற்பனைகள் மற்றும் சூதாட்ட நிலையங்கள் என்பனவற்றை நடத்திச் செல்கின்றமைக்கு எதிராக கூடிய கவனம் செலுத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது தொடர்ச்சியான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹன தெரிவிததுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்தி;ப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மதுபானங்களை முன்கூட்டியே பதுக்கிக்கொண்டு கூடிய விலையில் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதுதவிர, சூதாட்ட மையங்களை சுற்றிவளைப்பது குறித்து தொடர்ச்சியாக விசேட காவல்துறைபிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன...

சிவில் உடையில் ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
அதிகளவில் பணப் பரிமாற்றம் இடம்பெறுகின்ற அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment