Wednesday, April 09, 2014
புதுடெல்லி::பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 28 கட்சிகள் இணைந்திருப்பதாக அக்கட்சியின் துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்த கால கட்டத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி, தேசிய லோக்தளம், அகாலிதளம், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி என பல்வேறு கட்சிகள் இணைந்திருந்தன. பின்னர் இந்த கூட்டணியிலிருந்து திமுக விலகியது. அதை தொடர்ந்து லோக் ஜனசக்தி, தெலுங்கு தேசம், திரிணாமுல், தேசிய மாநாடு, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் விலகின. கடைசியாக நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் விலகியது. 2014 மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் நடவடிக்கைகளை பாஜ மேற்கொண்டது.
பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு தேசம், பாஜ கூட்டணி உறுதியானது. தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகள் இணைந்துள்ளன. இது தவிர பல்வேறு மாநிலங்களில் புதிய கட்சிகள் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளன. மத்தியில் பாஜ தலைமையிலான கூட்டணி அடுத்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கும் நிலையில் கூட்டணியில் புதிய கட்சிகள் தொடர்ந்து இணைந்து வருகின்றன.
நாடு முழுவதும் மொத்தம் 28 கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருப்பதாக அக்கட்சியின் துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமையக்கூடாது என்ற ஒரே செயல் திட்டம் தான் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டமாக இருக்கிறது. இதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் போக தயாராக இருக்கிறார்கள். மாயவலையை விரிப்பதற்காக பொய்களையும், உண்மைக்கு மாறான அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர். வரும் தேர்தலில் 350க்கும் அதிகமான இடங்களில் பாஜ கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.

No comments:
Post a Comment