Pages

Wednesday, April 2, 2014

பன்னாட்டு திட்டமிடல் அபிவிருத்திக் குழுவின் ‘டெம்பஸ்ட் எக்ஸ்பிரஸ் – 24’ ஆரம்பம்!

Wednesday, April 02, 2014
இலங்கை::பன்னாட்டு திட்டமிடல் அபிவிருத்திக் குழுவின் ‘டெம்பஸ்ட் எக்ஸ்பிரஸ் – 24’ ஊழியர் திட்டமிடல் பட்டறை பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் அலுவலகத்தால் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதியுடனும் ஐக்கிய அமெரிக்காவின் பசுபிக் கட்டளை அமைப்பினால் ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத்திணைக்கள அனுமதியுடனும் கொழும்பு கலதாரி ஹோட்டலில்  நேற்று (ஏப்.01) ஆரம்பமானது.
 
இதன் ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசீரிய கலந்து கொண்டார். இம் முழுப் பயிற்சிப் பட்டறை ஏப்ரல் 09 2014 வரை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இவ் அமர்வின் போது இலங்கை பாதுகாப்பு படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 23 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் 21 அவதானிப்பாளர்களுடன் இணைந்து பயிற்சியில் பங்கேற்கவுள்ள இதேவேலை, இந்த பன்னாட்டு முயற்சியில் வெளிநாட்டு பங்கேற்பாளர்களாக ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த 20 அதிகாரிகள் உள்ளடங்குவதுடன் ஏனைய 15 நாடுகளான வியட்நாம், கனடா, வங்காளதேசம், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, நேபால், மாலைத்தீவு, கம்போடியா, இந்தோனேஷியா, மலேஷியா, மங்கோலியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 
அழைப்புவிடுக்கப்பட்டுள் மேற்கூறிய நாடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட முகவர்கள் பங்கேற்கவுள்ள இந்த பயிற்சியானது, இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளின் போது ஒருவருக்கொருவர் பரஸ்பர ஆதரவு வழங்குதல் உட்பட பல அம்சங்களில் பரஸ்பரம் புரிதல், விழிப்புணர்வு என்பன உள்ளடங்கலாக முன்னெடுக்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

   

   

No comments:

Post a Comment