Wednesday, April 09, 2014
இலங்கை::செவனகல மற்றும் பெலவத்த சீனி உற்பத்தித் தொழிற்சாலை கடந்த வருடம் ஈட்டிய இலாபத்தில் 20 சதவீதத்தினை அதன் ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பகிர்ந்தளித்தார்.
இலங்கை::செவனகல மற்றும் பெலவத்த சீனி உற்பத்தித் தொழிற்சாலை கடந்த வருடம் ஈட்டிய இலாபத்தில் 20 சதவீதத்தினை அதன் ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பகிர்ந்தளித்தார்.
நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி தனியாருக்கு குறைந்த விலையில் கடந்த அரசாங்கத்தால் விற்கப்பட்ட செவனகல மற்றும் பெலவத்த சீனி உற்பத்தித் தொழிற்சாலையை அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் அத்தொழிற்சாலை கடந்த 2013 ஆம் ஆண்டில் 1486 மில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளது.
அந்த இலாபத்தின் 20 சதவீதத்தினையே தொழிற்சாலை ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஜனாதிபதி பகிர்ந்தளித்தார்.
இதற்கான வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் செவனகல சீனி உற்பத்தித் தொழிற்சாலையின் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த வைபவத்தில் ஊவா மாகாண ஆளுநர் நந்த மெதிவ், முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, அமைச்சர்களான விஜித் விஜிதமுனி சொய்சா, சுமேதா ஜீ ஜயசேன, ஜகத் புஷ்பகுமார மற்றும் லக்ஷமன் செனவிரத்ன ஆகியோர் உட்பட மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment