Saturday, April 05, 2014
இலங்கை::யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனா தொவித்துள்ளார்.
இலங்கை::யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனா தொவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே வாரந்தம் நடைபெறும் ஊடகவியலாளர் மாநாடு, யாழ். பொலிஸ் நிலையத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நேற்று பகல் 11.00 மணியளவில் நடைபெற்றது.
இதன்போது, கருத்து கூறுகையில் யாழ். பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ஒன்பது பொலிஸ் பிரிவிலும் 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும், இவர்களில் அரசாங்க சொத்துக்கு நட்டம் ஏற்படுத்தியது, பாலியல் துஷ்பிரயோகம், வாளினால் வெட்டியது சம்பந்தமாக தலா ஒருவரும், கொள்ளை, குடிபோதையில் வாகனம் செலுத்தியது, களவு, கலகம் விளைவித்தது சம்பந்தமாக தலா மூன்று பேரும், வாகன விபத்து சம்பந்தமாக நாலு பேரும், குடிபோதையில் கலகம் செய்தமை சம்பந்தமாக ஐந்து பேரும், பொது இடத்தில் மது அருந்தியமை சம்பந்தமாக 07 பேரும்,
பிடியானை பிறப்பிக்கப்பட்ட 12 பேரும், கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்தமை மற்றும் சந்தேகத்தின் பெயரில் தலா 13 பேரும், சட்டவிரோத மின் இனைப்பு பெற்ற 13 பேருமாக முப்பத்தியொன்பது பேரும் அடித்து காயப்படுத்தியது சம்பந்தமாக 37 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள்.
காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்கள் எட்டினாலும், பாரிய குற்றங்கள் சம்பந்தமாக 02 பேரும், சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மது விற்பனை செய்தமை சம்பந்தமாக ஒருவரும், குடிபோதையில் கலகம் உண்டாக்கியமை சம்பந்தமாக 03 பேரும், சந்தேகத்தின் பெயரில் 18 பேரும், பிடியானை சம்பந்தமாக 19 பேரும், ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக 19 பேருமாக 62 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment