Pages

Thursday, April 10, 2014

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில் சிறைக்கைதிகளை உறவினர்கள் சந்திக்க ஏற்பாடு!

Thursday, April 10, 2014
இலங்கை::சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில் சிறைக்கைதிகளை அவர்களின் உறவினர்கள் சந்திப்பதற்குச் சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
 
குறித்த இரு தினங்களில், காலை 8.30 மணிமுதல் மாலை 4 மணிவரை, சிறைக்கைதிகளை பார்வையிட முடியும். விரும்பினால் உணவுகளை வழங்கவும் முடியும் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம், நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
சாதாரண நாள்களில் சிறைக் கைதி ஒருவரைப் பார்வையிட அவரின் உறவினருக்கு சுமார் 10 நிமிடங்கள் மாத்திரமே நேரம் ஒதுக்கப்படும். ஆனால், இந்த புத்தாண்டு தினங்களில் சுமார் 30 நிமிடங்கள் வரை சிறைக்கைதிகளைச் சந்தித்து பேச முடியும் என அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment