Pages

Thursday, April 3, 2014

புலிகளை மீண்டும் ஒருங்கிணைத்துத் தலைமை தாங்கி வழிநடத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மூன்று நபர்கள் குறித்து தகவல் தந்தால் தலா 10 லட்சம் ரூபா சன்மானம்!

Thursday, April 03, 2014
இலங்கை::புலிகளை மீண்டும் ஒருங்கிணைத்துத் தலைமை தாங்கி வழிநடத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூன்று நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படுமெனப் பொலிஸ் திணைக்கம் அறிவித்துள்ளது. 'காவல் துறையினால் தேடப்படும் குற்றவாளிகள்' என்ற தலைப்பில் விடப்பட்டுள்ள இந்த அறிவித்தலுக்கமைய பொலிஸாருக்கு தகவல் கொடுத்தால் சன்மானமாகப் பத்து இலட்சம் ரூபா தரப்படுமென்றும் அறிவித்தல் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
புலிகளை மீளவும் ஒருங்கிணைத்துத் தலைமை தாங்கி வழிநடத்தும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கோபி என்பவர் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் அதே குற்றச்சாட்டின் பேரில் அப்பன் மற்றும் தெய்வீகன் ஆகிய மூன்று நபர்களும் தேடப்பட்டு வருகின்றனர் எனத் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது அந்த மூன்று நபர்களுடைய முழுமையான பெயர்கள் மற்றும் அவர்களுடைய புகைப்படங்களுடன் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் துண்டுப் பிரசுரம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் பரவலாக ஒட்டப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment