Pages

Friday, March 28, 2014

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப்!

 Friday, March 28, 2014
இலங்கை::யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென ஆஸ்திரேலியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்(Julie Bishop) இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை விவகாரங்களில் இலங்கையை ஊக்கப்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே ஆஸ்திரேலியாவின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி மெய்யான நல்லிணக்கத்தையோ அல்லது குற்றச்செயல்களுக்கு தண்டனை விதித்தலையோ அமுல்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
தனியான சுயாதீன சர்வதேச விசாரணை என்ற தீர்மானத்தின் உள்ளடக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கருத்தில் கொள்ளப்படாது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தி கவனத்தில் கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment