Pages

Monday, February 17, 2014

சென்னையில் திடீர் மழை நாளையும் பெய்யும்!

 Monday, February 17, 2014
சென்னை::வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகம் புதுச்சேரியில் இன்று காலை பலத்த மழை பெய்தது. நாளையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகம் முழுவதும் டிசம்பர் மாதத்துக்கு பின்பு கடந்த ஒரு மாதமாக வறண்ட வானிலையே காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்தாலும் பகலில் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் திடீரென மழை பெய்தது. பனிபொழிவுக்கு இடையே மழை வெளுத்து வாங்கியதால் தெருவெங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பெய்த மழையால் சென்னை நகரம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
 
வெயில் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தம் நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment