Wednesday, February 19, 2014

இந்திய பிராந்திய இராணுவத்தளபதி இலங்கை வருகை!

 Wednesday, February 19, 2014
இலங்கை::தென்னிந்திய இராணுவத்தளபதி லெப். ஜெனரல் அசோக் சிங் பி.வி.எஸ்.எம் ஏ.வி.எஸ்.எம் எஸ்.எம் வி.எஸ்எம் ஐந்து நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றுமாலை (பெப்.18) நாட்டுக்கு வருகை தந்தார்.

லெப். ஜெனரல் அசோக் சிங் தலைமையிலான குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பிராதான பாதுகாப்பு அதிகாரிகள் இராணுவத்தளபதி,கடற்படைத்தளபதி ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.
 
புகழ்பெற்ற அதிகாரியான லெப். ஜெனரல் அசோக் சிங், சென் அன்செம்ஸ் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பழைய மாணவராவார். மேலும் பாதுகாப்பு சேவைக் கல்லூரியின் பட்டதாரியுமாவார். ஒஸ்மானிய
 
பல்கலைக்கழகத்தின் முதுகலைமானிப்பட்டத்தைப் பெற்றுள்ள இவர் இஸ்லாமாபாத்தில் இந்திய உயர்ஸ்தானிகராக சேவையாற்றியதுடன் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஆலோசகராகவும் கடமைபுரிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
தென்னிந்திய இராணுவத்தளபதி லெப். ஜெனரல் அசோக் சிங் இந்திய இராணுவத்தின் பழம்பெரும் சிறந்த ஒரு கட்டளை அதிகாரியாக திகழ்கின்றார்.
 
புலிகளினால் கொல்லபட்ட இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் மாலை அணிவித்து நினைவு கூர்ந்தார் 1987-1990 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய அமைதி காக்கும் படையின் நடவடிக்கைகள் போது -1138 இந்திய இராணுவ சிப்பாய்கள்  போராடும் போது கொல்லபட் டனர் . இதேபோல், 2762 இந்திய அமைதி காக்கும் படையின் வீரர்கள் காயமடைந்தார்கள்.

No comments:

Post a Comment