Pages

Thursday, February 20, 2014

ஜெயலலிதா முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்!!

Thursday, February 20, 2014
சென்னை::மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இவர் விஜயகாந்த் தலைமையில் இயங்கும் தே.மு.தி.க.வில் இணைந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். சட்ட மன்றத்தில் எதிர்கட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் விஜயகாந்துடன் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் இன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை இன்று முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவருடைய மனைவி சாந்தி, மகன் சம்பத்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment