Pages

Wednesday, February 12, 2014

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி கலந்துரையாடல்!

Wednesday, February 12, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளரும் ஆசிய பசுபிக் பிராந்திய அபிவிருத்தித் திட்டப் பணிப்பாளருமான ஹவூலிஹேங் சூ தலைமையிலான குழுவினர் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 11 பெப்பிரவரி 2014 அன்று இடம்பெற்ற இச்சந்திப்பில் போருக்குப் பின்னராக வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது...
 
ஹவூலிஹேங் சூ மேலும் தெரிவிக்கையில்:-
 
ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் தாம் கலந்துரையாடியதாகவும்  எதிர்காலம் நம்பிக்கை மிக்கதாக இருக்குமென்று எதிர்பார்ப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.
மேலும், தம்முடன் சேர்ந்து வடமாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்துவதற்கும் அதில் பங்குபற்றுவதற்கும் ஆளுநர் விருப்பம் தெரிவித்தாகவும் ஐ.நா. பிரதிநிதிகள் கூறினர்.
இந்த நிலையில் பாரிய வேலைத்திட்டங்களையும் பார்க்க மக்களுக்கான அன்றாடத் தேவைகள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பில் சிந்திக்க வேண்டியது அவசியமென்பதைப் பற்றி நாங்கள் கூடிய அக்கறையுடன் உள்ளோம்.
 
ஆனாலும், எங்களுக்கு முக்கிய தேவையாகவிருப்பது மக்களுடைய நலன் மட்டுமே. மக்களுடைய நலன்கள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டுமென்பதே எமது நோக்கம் என்றும் தெரிவித்தேன்.
இதன் மூலமே உண்மையான இணக்கத்தை ஏற்படுத்த முடியுமென்றும் நான் கூறினேன் என்றார்.
 
வட மாகாண ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவனும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment