Thursday, February 20, 2014
இலங்கை::இலங்கை மீது தேவையற்ற அழுத்தங்களை
பிரயோகிக்க சில தரப்பினர் முயற்சித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான
இலங்கைப் பிரதிநிதி பீ.எம். ஹம்சா தெரிவித்தள்ளார்.
ஐரோப்பிய பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகள் அடிப்படையில்ழ ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்
நிறைவேற்றப்படு;ம் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை குற்றவாளியாக்கும் முனைப்புக்களில் சில தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்
பக்கச்சார்பற்ற தன்மை குறித்த சந்தேகங்களை எழுப்பி விடுவதாகக்
குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை எற்படுத்துவதில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணகத்தையும் ஏற்படுத்தும் நோக்கில்
தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், தீர்மானம் நிறை
வேற்றப்படுவதனால் நேர் எதிர்விளைவுகளே ஏற்படும் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டுக்கு எது நல்லதோ அதனை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் உண்மையைக் கண்டறியும்
ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டு
வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment