Tuesday, February 18, 2014
இலங்கை::மனித உரிமைகள் விடயத்தில் நவநீதம் பிள்ளை இலங்கை பற்றி சமர்ப்பித்துள்ள
பரிந்துரைகளுக்கு அரசாங்கம் உகந்த பதிலளித்துள்ளதாகத் தெரியவருகிறது.
அரசாங்கத்தின் பதிலை ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தின்
ஊடாக குறித்த தினத்துக்கு முன்னர் அவரிடம் கையளிக்கப்பட விருப்பதாக வெளிவிவகார
அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையின் பதில் சம்பந்தப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கம் செயற்பட்டிரு ப்பதாக
அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நவநீதம்பிள்ளையின் அறிக்கை 20
பக்கங்கள் கொண்டதாகும்.
இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்துதல், கற்றுக்கொண்ட
பாடங்கள் மற்றும் நல்லிக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சிபார்சுகளை அமுலாக்குதல்,
திருகோணமலையில் இளைஞர்கள்கொலை, மனித உரிமை பாதுகாப்புக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள்
தொடர்பான காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
காணாமல்போனோர் தொடர்பாக கண்டறிய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பாகவும்,
விளக்கப்பட்டுள்ளது. நவநீதம்பிள்ளையின் பரிந்துரைகள் தொடர்பாக இலங்கை அரசு இணக்கம்
தெரிவிக்கவில்லை.
மார்ச் மாதத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள்
ஆரம்பமாகும். அது
தொடர்பாக உடனடியாகவே அவதானம் செலுத்தப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment