Pages

Monday, February 10, 2014

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை: ஜனாதிபதியின் பாரியாரும் இலங்கையின் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ!

Monday, February 10, 2014
இலங்கை::பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைககளை நடைமுறைப்படுத்திய நாடாக இலங்கை விளங்குகின்ற அதேவேளை, இலங்கை அரசியலமைப்பின் படி ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்பது அனைத்துப் பிரஜைகளினதும் உரிமையுமாகும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் பாரியாரும் இலங்கையின் முதல் பெண்மணியுமான ஷிரந்தி  ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
சிறீ சிறீ ரவிசங்கரின் ஆர்ட் ஒப் லிவிங் (வாழும் கலை) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் மாநாடு, இந்தியாவின் பங்களுர் நகரில் நேற்று முன் தினம் (08.02.14) நடைபெற்றது. ஆறாவது முறையாக நடத்தப்படும் இந்த மாநாடானது இம்முறை 'பரிபூரணமாக அபிவிருத்தி' என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தப்பட்டது.
 
இதில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதியின் பாரியார், 'இலங்கையில் நடைமுறையிலுள்ள மகளிர் கொள்கைகளுக்கு அமைய பெண்களுக்கான அரசியல் மற்றும் பொது உரிமைகள், கல்வி, பொருளாதார நலன்கள், பாதுகாப்பு மற்றும் போசனை, சமூக சீர்கேடுகளிலிருந்தான பாதுகாப்பு, சித்திரவதைகளிலிருந்து விடுபட்ட வாழ்க்கை உள்ளிட்ட பல உரிமைகளை இலங்கைப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment