Monday, February 17, 2014
இலங்கை::காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணஹம இல்லாத நிலையில், தற்போது யாழில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இலங்கை::காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணஹம இல்லாத நிலையில், தற்போது யாழில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
கடந்த 1990ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள், யாழ். மாவட்டத்தில் இன்றுடன் நான்காவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்த விசாரணைகளின் சாட்சியமளிப்புகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, 10.55 மணியளவில் 17வது நபரின் விசாரணைகள் முடிவடைந்தபோது ஆணைக்குழுவின் தலைவர் உடல்நலம் குறைவாகவுள்ளதாக கூறிவிட்டு விசாரணைகளிருந்து வெளியேறினார்.
தற்போது இந்த ஆணைக்குழவின் விசாரணைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது. இதுவரை இடம்பெற்ற விசாரணைகளில் இராணுவத்தினருக்கு எதிராகவே அதிகளவான சாட்சியங்கள் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment