Wednesday, February 12, 2014
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியா மற்றும் மியன்மாருக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் மாதத்தில் ஜனாதிபதி இந்த விஜயங்களை மேற்கொள்ள உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மாதம் பிரித்தானியாவின் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் உள்ளிட்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளது தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆரம்பமானதன் பின்னர் நடைபெறும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் பங்கேற்கும் சில உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நிலைமைகளை ஜனாதிபதி விளக்கி ஆதரவு திரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment