Tuesday, February 04, 2014
புது தில்லி::ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது சீராய்வு மனு
மீதான இரு தரப்பு வாதம் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி மூன்று பேரின்
சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீது, கடந்த வாரம் மூத்த
வழக்குரைஞர் ராம் ஜெத் மலானி வாதத்தை முன் வைத்தார்.
இந்த நிலையில், இன்று மத்திய அரசு சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
அப்போது, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க மத்திய அரசு
எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும், மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள
தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கூடாது. அவர்களது குற்றத்தை
ஆராய்ந்து பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும். மூவரின் கருணை மனுவை
பரிசீலிக்க கால தாமதம் ஆனதை அடிப்படையாக வைத்து
தண்டனையைக் குறைக்கக்
கூடாது. கருணை மனு பரிசீலிக்க கால தாமதம் ஆனதால், மூவரும் மனக்கவலை
அடையவில்லை என்று மத்திய அரசு சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பு வாதமும் நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment