Pages

Monday, February 10, 2014

மக்களை வஞ்சிக்கிறது காங்., : நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

 Monday, February 10, 2014
கொச்சி::கேரள மாநிலம், கொச்சியில், நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது: காங்கிரஸ் கட்சி, 60 ஆண்டுகளாக, மத்தியில் ஆட்சியில் உள்ளது. மக்கள் இடையே, பிரிவினையை ஏற்படுத்தி, அதில் குளிர் காய்கிறது. 
 
தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக் கான உரிமைகளை பரிக்கும் சதிச் செயலை, காங்., கட்சி மேற்கொண்டு உள்ளது. தலித் மக்களுக்காக, டாக்டர் அம்பேத்கர் அளித்துள்ள சில உரிமைகளை பறிக்கும் சதிச் செயல்களை, காங்., கட்சி அரங்கேற்றுகிறது. நாட்டு மக்களிடையே விஷ விதையை தூவுவதற்கு, நீதிபதி ரங்கநாத் கமிஷன் அறிக்கையை, காங்., கட்சி பயன்படுத்துகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
 
மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்., கட்சி, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை அபகரித்து, அவர்களை வஞ்சிக்கிறது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.

No comments:

Post a Comment