Tuesday, February 11, 2014

மதிலுக்கு இரையான இராணுவச் சிப்பாய்! யாழ். பலாலியில் பரிதாபம்!

Tuesday, February 11, 2014
இலங்கை::யாழ். பலாலி படைத் தலைமையகத்தின் இராணுவ முகாமிலுள்ள மதில் செவ்வாய்க்கிழமை (11) காலை திடீரென்று உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இராணுவ முகாமில் மதில் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் அதனுள் அகப்பட்ட கண்டி, வலப்பனை பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஜே.எம்.எஸ்.பண்டார (வயது 23) என்ற சிப்பாய் படுகாயம் அடைந்த மீட்கப்பட்டு, பலாலியிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment