Pages

Monday, February 10, 2014

இலங்கை மீதான கமரூனின் குற்றச்சாட்டுக்கள் சர்வதேச நீதிமன்றில் எடுபடப்பேவதில்லை: ஏன் ?!

Monday, February 10, 2014
இலங்கை::டேவிட் கமரூனும் அவரது அரசாங்கமும் அவர்களது யுத்தக்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமண்றத்திற்கு பதில் கூறுவதை மறுத்துவிட்டு இலங்கைக்கு யுத்தக்குற்றங்களை சுமத்தும் முயுற்சியின் காரணங்கள் அண்மையில் இடம்பெற்ற இரு செயற்பாடுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பிரித்தானியாவிலுள்ள தமிழ் அமைப்புக்களை சந்தித்ததன் பின்னரே நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்றார். பிரித்தானிய தமிழ் போரம், குளோபல் தமிழ் போரம் உள்ளிட்ட பல தமிழ் அமைப்புக்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றில் அவரிடம் வினவப்பட்ட போது, அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஈராக் மீது கடந்த 13 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது அரை மில்லியன் ஈராக்கிய சிறுவர்கள் கொல்லப்பட்டதை தெளிவுபடுத்திய ஆக்கங்கள் பிரித்தானிய ஊடகங்களில் வெளிவந்தது.
 
கன்ஸர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உருப்பினர் பரோன்ஸ் வர்சி கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி இலக்கம் 10 டவ்னிங் ஸ்ட்ரீட் இல் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரித்தானிய தமிழ் போரம், குளோபல் தமிழ் போரம், பிரித்தானிய தமிழ் கென்ஸர்வேடிவ் அமைப்பு, தமிழ் போ லேபர்ஸ் அமைப்பு, தமிழ் தகவல் நிலையம், இன அழிப்புக்கு எதிரான தமிழர் இயக்கம், இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளை என அழைக்கப்பட்ட அனைத்து அமைப்புக்களும் கலந்து கொண்டதாக குறிப்பிட்டார்.
 
ஈராக்கின் இரத்தக்களரிக்குறிய குற்றவாளியின் உண்மைகள் எண்ணிலடங்காதவை” எனும் தலைப்பிலான உண்மையை வெளிச்சப்படுத்திய அரச விருது வென்ற எழுத்தாளர் ஜான் பிளிகர் குறிப்பிடுகையில் “முதலாம் உலக யுத்தம் தொட்டு ஊடகங்களின் மூடிமறைப்பானது மேற்கு நாடுகளின் குற்றங்களின் மறுதளிப்புக்கான ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. ஆனால் இவ்வாறு குற்றம் புரிந்தவர்கள் மீதான கேள்விகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
"பிரித்தானியா போன்ற மேற்கத்திய நாடுகளின் குற்றங்கள் தமது படுகொலைகளை ஒடுக்கும் கருவியான ஊடகங்களை பயன்படுத்தியுள்ளது” என ஜான் பிளிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கில் புரியப்பட்ட பாரிய குற்றச் செயலானது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என எழுத்தாளர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
 
13 வருடகாலமாக ஈராக்கில் அமெரிக்காவினாலும் பிரித்தானியாவினாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற இரத்தக்களரிகளை பிரதான ஊடகமான பி.பி.சி உட்பட அனைத்து ஊடகங்களும் வெளியிடாதவன்னம் ஒடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் யுனிசெப்பின் கூற்றின்படி சுமார் அரை மில்லியன் குழந்தைகள் கொள்ளப்பட்டுள்ளமை நிரூபிக்கப்படுள்ளது.

No comments:

Post a Comment