Wednesday, February 5, 2014
புதுடெல்லி::இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று பாரத ரத்னா விருதை வழங்கி கௌரவித்தார். இந்திய கிரிக்கெட் அணியில் 24 ஆண்டு நட்சத்திர வீரராக வலம் வந்து ரசிகர்களின் மனதில் கிரிக்கெட் கடவுளாக திகழ்ந்த சச்சின் சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் உள்பட பல்வேறு சாதனைகள் படைத்தார்.
புதுடெல்லி::இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று பாரத ரத்னா விருதை வழங்கி கௌரவித்தார். இந்திய கிரிக்கெட் அணியில் 24 ஆண்டு நட்சத்திர வீரராக வலம் வந்து ரசிகர்களின் மனதில் கிரிக்கெட் கடவுளாக திகழ்ந்த சச்சின் சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் உள்பட பல்வேறு சாதனைகள் படைத்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 16 _ம்தேதி மே.இ.தீவுக்கு எதிராக மும்பையில் தனது
200 _வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் சச்சின் ஓய்வு பெற்றார்.
அன்றைய தினம் மத்திய அரசு பாரத ரத்னா விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்படும் என்று அறிவித்தது.
ஏற்கனவே இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் அசத்திய மறைந்த ஹாக்கி
ஜாம்பவான் தயான் சந்த்துக்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் என்ற கோரிக்கை
இருந்து வந்தது.
இந்த நிலையில் கிரிக்கெட் வீரரான சச்சினுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது விளையாட்டு வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சச்சினுக்கு இவ்விருது வழங்கப்பட்ட நடைமுறைகள் குறித்து
தெரிவிக்குமாறு விளையாட்டு ஆர்வலர் ஹேமந்த் துபே என்பவர் தகவல் அறியும்
உரிமை சட்டத்தின் (ஆர். டி.ஐ.) மூலம் வி
ண்ணப்பித்தார்.
இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில் சச்சின் குறித்த
விவரங்களைஅனுப்புமாறு கடந்த 2013 நவம்பர் 14 ம்தேதி மதியம் 1.35 மணிக்கு
மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பிரமதமர் அலுவலகம் பேக்ஸ் அனுப்பியது.
மாலை 5.22 மணிக்கு சச்சினின் விவரங்களை பிரதமர் அலுவலகம் பெற்றது.
பின்னர் இது விளையாட்டுத் துறை செயலரின் அனுமதிக்கு அனுப்பி
வைக்கப்பட்டது.
மறு நாள் 15_ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தனது தரப்பு வேலைகளை
முடித்து சச்சினுக்கு பாரத ரத்னா தருவது குறித்த செயல் திட்டத்துக்கு
ஒப்புதல் தர வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பினார்.
இந்த பணிகள் அனைத்தும் சுமார் 24 மணி நேரத்தில் முடிந்தது. இதைத்
தொடர்ந்து நவம்பர் 16 _ம் தேதி விருது பற்றிய அறிவிப்பு வெளியானது.
17 _ம் தேதிபிரதமர் மன்மோகன் சிங் சச்சினுக்கு கடிதம் மூலம் இதை தெரியப்படுத்தினார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற
விழாவில் சச்சினிக்கு பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
வழங்கினார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சி.என். ஆர். ராவும் பாரத ரத்தனா
விருது பெற்றார். இந்த விருதை குறைந்த வயதில் பெற்ற மற்றும் முதல்
விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் சச்சின் படைத்தார்.
விழாவில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சச்சினின் மனைவி அஞ்சலி, மகள் சாரா உள்பட
முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து டெண்டுல்கரிடம் கேட்ட போது, பாரத ரத்னா விருதை தனது
தாயாருக்கு சமர்ப்பிப்பதாகவும், இந்தியாவில் பிறந்ததற்காக
பெருமைப்படுவதாகவும், தெரிவித்தார். மேலும் கிரிக்கெட்டில் இருந்து தான்
ஓய்வு பெற்ற போதிலும், கிரிக்கெட் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன்
என்றும் அவர் கூறினார்.
.jpg)
No comments:
Post a Comment